மாஸ்க் அணிவது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு குழப்பத்தை ஏற்படுத்துவதாக உள்ளதாக பாரீஸுக்கு சுற்றுலா வந்துள்ள சுற்றுலாப்பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
பாரீஸ் மற்றும் அதைச் சுற்றியுள்ள கூட்டம் அதிகமுள்ள சுற்றுலாத்தலங்கள் 100இல் மாஸ்க் அணிவது கட்டாயம் என திங்களன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த பட்டியலில் Seine நதியின் கரையோரப்பகுதிகள், Place des Fetes சதுக்கம் ஆகியவை இடம்பெற்றாலும், ஈபிள் கோபுரம் மற்றும் Champs Elysees ஆகியவை இடம்பெறவில்லை.
விதிகளைப் பின்பற்றாதவர்களுக்கு 135 யூரோக்கள் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பாரீஸ் அதிகாரப்பூர்வ இணையதளம் எங்கெல்லாம் மாஸ்க் அணியவேண்டும் என்பது குறித்த விவரத்தை வெளியிட்டுள்ளது.
என்றாலும், நாங்கள் சுற்றுலாப்பயணிகள், முன் பின் தெரியாத தெருக்களிலெல்லாம் சுற்றும்போது எங்கே மாஸ்க் அணிவது கட்டாயம், எங்கே மாஸ்க் அணியவேண்டியதில்லை என்பதையெல்லாம் பின்பற்றுவது கடினம்.
அதற்காக தெளிவான அறிவிப்புகள் அந்தந்த இடங்களில் ஒட்டப்பட்டிருந்தாலொழிய இந்த விதிகளை பின்பற்றுவது கடினம் என்கின்றனர் சுற்றுலாப்பயணிகள்.
அவர்கள் சொல்வதும் நியாயம்தான், காரணம், ஒரு தெருவின் ஒரு பாதியில் மாஸ்க் அணிவது கட்டாயம், மறு பாதியில் அணிய தேவையில்லையாம்... பாவம் ஊருக்கு புதிதாக வந்த சுற்றுலாப்பயணிகள் என்ன செய்வார்கள்? அவர்கள் சுற்றுலா வந்த இடங்களை பார்த்து ரசிப்பார்களா அல்லது எங்கெல்லாம் மாஸ்க் அணிவது என்று இணையத்தைப் பார்த்துக்கொண்டே அலைவார்களா?