பிரான்சில் இந்த நகரம் முழுவதற்கும் முகக்கவசம் கட்டாயம்! வரும் வெள்ளிக் கிழமை முதல் அமுல்

Report Print Santhan in பிரான்ஸ்
841Shares

பிரான்சில் கொரோனா வைரஸின் பாதிப்பு தீவிரமாகி வரும் நிலையில், துலூஸ் நகர் முழுவதும் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பிரான்சில் தொடர்ச்சியான கொரோனாத் தொற்று அதிகரிப்பினால் பல நகரங்கள் அவதிக்குள்ளாகின்றன. நாட்டில் இதுவரை கொரோனாவால் 30,451 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.

கடந்த 24 மணி நேரத்தில், மட்டும் 3,015 பேர் புதிதாக கொரோனா தொற்றிற்கு உள்ளாகி வருகின்றனர்.

இதனால் நாட்டின் பல நகரங்களில் கட்டாய முகக்கவசம் ஆணை பிறப்பித்து வரும் நிலையில், Toulouse நகரத்தின் ஆணையாளர், வரும் வெள்ளிக்கிழமையிலிருந்து, Toulouse நகர் முழுவதற்கும் கட்டாய முகக்கவசம் அணிய வேண்டிய ஆணையை விதித்துள்ளார்.

© Lionel Bonaventure, AFP

வெள்ளிக்கிழமை 21-ஆம் திகதி காலை 7 மணியிலிருந்து இந்தச் சட்டம் நடைமுறைக்கு வரும். இது அனைத்து வீதிகளிற்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

12 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய அனைவருக்கும் முகக்கவசம் கட்டாயம், மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.

மேலும், பிரான்சின் மூன்றாவது அதிக மக்கள் தொகை கொண்ட நகரமான லியோனிலும் விரைவில் முகக்கவசம் கட்டாயமாக்கப்படும். ஏற்கனவே நாட்டில் முகக்கவசம் பொது போக்குவரத்து மற்றும் பொது இடங்களில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது நினைவுகூரத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்