பிரான்சின் முக்கிய நகரில் புதிய விதி அமல்.. மீறுபவர்களுக்கு இது தான் கதி!

Report Print Basu in பிரான்ஸ்
3318Shares

பிரான்சின் சில நகரங்களில் மக்கள் கூட்டம் அதிகமுள்ள பகுதிகளில் மட்டும் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் தெற்கு ரிவியரா நகரமான நைஸ் ஒரு படி மேலே சென்று முகக்கவச விதியை கடுமையாக்கியுள்ளது.

இன்று காலை நிலவரப்படி, நைஸ் நகரில் வெளிப்புறங்களில் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. மற்றொரு தெற்கு நகரமான துலூஸிலும் வெள்ளிக்கிழமை முதல் இதே விதி அமலாகிறது.

நைஸ் மேயர் கிறிஸ்டியன் எஸ்ட்ரோசி, கொரோனாவுக்கு எதிரான எங்கள் போராட்டம் தொடர்ந்து நிலைத்திருக்க, மிகவும் தீவிரமான பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக இந்த முடிவை எடுத்துள்ளேன்.

நகரின் வெளிப்புறங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்பதால் முகக்கவசம் எங்கு அணிய வேண்டும் என்பதில் மக்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை என்று கூறினார்.

மேலும் உள்நாட்டில் பரவும் நோய்த்தொற்றின் விகிதம் 1.2 முதல் 6 வரை உயர்ந்துள்ளது. முகக்கவசம் இல்லாதவர்களுக்கு பொலிசார் அபராத்ங்களை வித்த்து வருகின்றனர் என நைஸ் நகர மேயர் எஸ்ட்ரோசி கூறினார்.

மே மாதத்தில் இருந்ததை விட பிரான்ஸில் தினசரி பதிவாகும் கொரோனா வழக்குகள் அதிகரித்துள்ளது, . நேற்று கிட்டத்தட்ட 3,800 வழக்குகள் பதிவானது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்