பிரான்சில் கொண்டுவரப்பட்ட புதிய சட்டம்... பொலிசாருக்கு! முக்கிய அறிவிப்பு

Report Print Santhan in பிரான்ஸ்
1091Shares

பிரான்சில் பொலிசார் கடமையில் ஈடுபடும் போது, முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக பிரான்சில் இதுவரை 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக நாட்டில் பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டது.

அதுமட்டுமின்றி ஒரு சில நகரங்களில், வெளியில் வந்தாலே மக்கள் முகக்கவசம் கட்டாயம் என்ற விதியும் உள்ளது.

இந்நிலையில், général de la police nationale (DGPN) இன் இயக்குனர் Frédéric Veaux, பொலிசார் பாதுகாப்புக்காக அவர்கள் கடமையில் ஈடுபடும் போது முகக்கவசம் அணிய வேண்டும்.

பொது மக்களுடன் நெருக்கமான நடவடிக்கையின் போதும், காவல்துறை வாகனத்தில் ஒருவருக்கு மேல் பயணிக்கும் போதும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, பொலிசாருக்கு இலவச முகக்கவசம் வழங்கப்படும் எனவும், துணியினால் தைக்கப்பட்ட துவைத்து மீண்டும் பயன்படுத்தக்கூடிய முகக்கவசங்கள் என்று கூறியுள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்