பிரான்சில் இந்த மாகணத்தை கொரோனா ஆபத்து வலையமாக அறிவித்தது ஜேர்மனி! வெளிவரும் முக்கிய தகவல்

Report Print Santhan in பிரான்ஸ்
806Shares

பிரான்சில் இல் து பிரான்ஸ் மாகாணத்தை கொரோனா ஆபத்து வலையமாக ஜேர்மனி அறிவித்துள்ளது.

பிரான்ஸ் அரசு நாட்டில் கொரோனா வைரஸ் மீண்டும் மெல்ல், மெல்ல பரவி வருவதால், நாட்டில் கொரொனாவின் இரண்டாவது அலை தாக்கிவிடக் கூடாது என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இல் து பிரான்சுக்குள் இருந்து ஜேர்மனிக்கு பயணிப்பவர்களை அங்கு 14 நாட்கள் தனிமைப்படுத்தவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, Alpes-Côte-d'Azur மாகாணத்தையும் அதிக கொரோனா தொற்றுள்ள ஆபத்து வலையமாகவும் அறிவித்துள்ளது.

ஜேர்மனியில் அவர்களுடைய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் இணையத்தளத்தில் அவசியமில்லாத பயணங்களை தவிர்க்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தவிர, ஜேர்மனியில் இருந்து இல் து பிரான்ஸ் அல்லது, Provence-Alpes-Côte-d'Azur மாகாணத்துக்கு வருபவர்கள், மீண்டும் ஜேர்மனிக்கு செல்லும் போது தனிமைப்படுத்தப்படுவார்கள் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்