பிரான்ஸை எப்போது கொரோனா இரண்டாவது அலை தாக்கும்: வெளியான முக்கிய தகவல்

Report Print Basu in பிரான்ஸ்
6585Shares

சீனாவின் வுஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் இன்று ஐரோப்பிய நாடுகள் உட்பட உலக நாடுகளை கடுமையாக அச்சுறுத்தி வருகிறது.

கொரோனாவின் இரண்டாவது அலையை எப்படி சமாளிக்க போகிறோம் என உலக நாடுகள் திணறி வரும் நிலையில் வுஹான் நகரம் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடத்தும் அளவிற்கு இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.

குறிப்பாக கொரோனா கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட பிரான்சில் தற்போது மீண்டும் கொரோனா வழக்குகள் அதிகரித்து வருகிறது.

பிரான்சில் தற்போது வரை 30,549 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர், 2,85,902 பேருக்கு நோய்த்தொற்று உறுதியாகியுள்ளது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்றுநோயின் இரண்டாவது அலை நவம்பரில் பிரான்சைத் தாக்கக்கூடும் என்று அரசாங்க ஆலோசகர் தெரிவித்தார்.

அதாவது, நவம்பரில் இரண்டாவது அலை ஏற்படுமோ என்ற அச்சம் உள்ளது என்று தொற்றுநோய் குறித்து அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கும் விஞ்ஞான சபைக்கு தலைமை தாங்கும் பேராசிரியர் ஜீன்-பிரான்சுவா டெல்ஃப்ரைஸி தெரிவித்தார்.

அதே சமயம் பிரான்சின் மார்சேய் நகரம் கொரோனாவை எதிர்த்துப் போராடுவதற்கான கட்டுப்பாடுகளை கடுமையாக்கியது.

மார்சேயில் அதிகாரிகள் பார்கள் மற்றும் உணவகங்கள் இயங்கும் நேரத்தை குறைத்துள்ளனர், ஆகஸ்ட் 26 முதல் செப்டம்பர் 30 வரை நகரத்தில் கட்டாய முகக் கவசம் அணிய வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்