சூரியக்குளியல் போட்ட பெண்களை ஒழுங்காக உடை உடுத்த வற்புறுத்திய பொலிசார்: கொந்தளிக்கும் பிரான்ஸ்

Report Print Balamanuvelan in பிரான்ஸ்
1356Shares

பிரான்ஸ் கடற்கரை ஒன்றில் மேலாடையின்றி சூரியக்குளியல் எடுத்த மூன்று இளம்பெண்களை உடலை மூடும்படி பொலிசார் வற்புறுத்திய விடயம் பிரான்சைக் கொந்தளிக்கச் செய்துள்ளது.

பிரான்ஸ் கடற்கரை ஒன்றில் மூன்று இளம்பெண்கள் மேலாடையின்றி சூரியக்குளியல் எடுத்துக்கொண்டிருக்க, அங்கிருந்த வேறு நாட்டைச் சேர்ந்த பெண்மணி ஒருவர், தன்னுடன் தன் பிள்ளைகளும் கடற்கரைக்கு வந்திருப்பதாகவும், அவர்கள் கண்ணில் இந்த பெண்கள் பட்டுவிடக்கூடாது என்பதற்காக அங்கிருந்த பொலிசாரிடம் புகாரளித்துள்ளார்.

உடனே, அந்த பொலிசார் அந்த பெண்களிடம் சென்று உடலை மூடுங்கள் என்று சொல்லியிருக்கிறார்கள்.

அந்த பெண்கள் அதை அவமானமாக கருதி உடனடியாக படபடவென தங்கள் மேலாடைகளை எடுத்து உடுத்திக்கொண்டிருக்கிறார்கள்.

இந்த சம்பவம் செய்திகளில் வெளியானதையடுத்து பிரான்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட நாட்டின் நாலாபகுதிகளிலுமுள்ள மக்கள் அந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்கள்.

பிரான்சில் மேலாடையின்றி சூரியக்குளியல் எடுப்பதற்கு சட்டப்படி அனுமதி உள்ள நிலையில், அந்த பெண்கள் ஏன் அப்படி நடத்தப்பட்டார்கள் என கேள்வி எழுப்பியுள்ளார்கள் ஏராளமானோர்.

நட்டில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதையடுத்து அந்த பெண்களுக்கு ஆதரவாக பேசியுள்ள பிரான்ஸ் உள்துறை அமைச்சர் Gerald Darmanin, அந்த பொலிசாரின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

ட்விட்டரில் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில், அந்த பெண்களை உடலை மூடும்படி எச்சரித்தது தவறு, சுதந்திரம் என்பது விலை மதிப்பற்றது, அதிகாரிகள் தங்கள் தவறுகளை ஒப்புக்கொள்ளவேண்டும் என்று தெரிவித்துள்ளார் அவர்.

உடனே பின்வாங்கிய பொலிசாரும், தாங்கள் நடந்துகொண்ட விதம் மோசம்தான் என்றும், அந்த சூழ்நிலையை அமைதியாக்குவதற்காகத்தான் அப்படி நடந்துகொண்டதாக சப்பைக் கட்டு கட்டியுள்ளார்கள்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்