பிரான்சில் இதுவரை இல்லாத அளவிற்கு உச்சத்தை தொட்ட கொரோனா பரவல்! மீண்டும் நாடு முடக்கப்படுமா?

Report Print Santhan in பிரான்ஸ்
3131Shares

பிரான்சில் இன்று மட்டும் இதுவரை இல்லாத அளவிற்கு கொரோனா தொற்று பரவலில் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது, ஒரு வித பயத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனாவின் பரவல் குறைந்துவிட்டதாக நினைத்த நிலையில், பிரான்சில் மீண்டும் தன்னுடைய ஆட்டத்தை கொரோனா வைரஸ் ஆரம்பித்துள்ளது என்றே கூறலாம்.

கடந்த சில தினங்களாகவே நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து கொண்டே வருகிறது.

இந்நிலையில், இன்று பொது சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல்களின் படி, கடந்த 24 மணிநேரத்தில் 8,975 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

ஒரே நாளில் பதிவாகியுள்ள அதிகபட்ச தொற்று எண்ணிக்கை இது என அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஏனெனில் கடந்த வியாழக்கிழமை 7,157 பேருக்கும், புதன்கிழமை 7,017 பேருக்கும் கொரோன தொற்று ஏற்பட்டிருந்தது. முதலில் 4.2 வீதத்தில் இருந்த கொரோனா தொற்று இப்போது 4.5 சதவீதத்தை எட்டியுள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 53 கொரோனா தொற்று வலையங்கள் கண்டறியப்பட்டுள்ளது. 4,671 பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 473 பேர் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை 30,686 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 18 பேர் கடந்த 24 மணிநேரத்தில் மரணமடைந்தவர்கள். தற்போது நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், மீண்டும் முடக்கப்படுவதற்கு அதிக வாய்ப்பிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்