பள்ளிகள் திறந்து சில நாட்கள் கூட ஆகவில்லை... அதற்குள் 22 பள்ளிகள் மூடல்!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிரான்சில் பள்ளிகள் திறந்து சில நாட்கள் கூட ஆகாத நிலையில், கொரோனா பரவல் காரணமாக 22 பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.

பிரான்சில் கடந்த செவ்வாயன்றுதான் பள்ளிகள் திறக்கப்பட்டன.

சுமார் 12 மில்லியன் மாணவர்கள் பள்ளிக்கு திரும்பி சில நாட்களே ஆகியுள்ள நிலையில், கொரோனா பரவலையடுத்து 22 பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக பிரான்ஸ் கல்வித்துறை அமைச்சர் Jean-Michel Blanquer தெரிவித்துள்ளார்.

பிரான்சில் 12 பள்ளிகளும், இந்தியப் பெருங்கடலிலுள்ள பிரான்சுக்கு சொந்தமான La Réunion தீவில் 10 பள்ளிகளுமாக மொத்தம் 22 பள்ளிகள் மூடப்பட்டுள்ளன என்றார் அவர்.

இந்த கொரோனா பரவல்கள் உண்மையில் பள்ளிக்கு வெளியிலிருந்து மாணவர்கள் வரும்போதே கொண்டுவரப்பட்டவை என்கிறார் அவர்.

அதாவது கோடை விடுமுறைக்கு மாணவர்கள் சென்றிருந்த இடத்தில் அவர்களுக்கு தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்கிறார் அவர்.

ஒரு பள்ளியில் மூன்று பேருக்கு அதிகமானோருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தால், அந்த பள்ளி தற்காலிகமாக மூடப்படும் என்கிறார் Blanquer.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்