பிரான்சில் மேலும் பல பகுதிகளில் உயர் எச்சரிக்கை: அரசாங்கம் முக்கிய அறிவிப்பு

Report Print Basu in பிரான்ஸ்

பிரான்சில் கொரோனா நோய்த்தொற்றுகள் அதிகரிப்பதால் மேலும் ஏழு பகுதிகள் உயர் எச்சரிக்கை பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

லில்லி, ஸ்ட்ராஸ்பேர்க் மற்றும் டிஜோன் போன்ற முக்கிய நகரங்களை உள்ளடக்கிய மேலும் ஏழு பகுதிகளை உயர் எச்சரிக்கை பகுதிகளாக பிரான்ஸ் அரசாங்கம் அறிவித்துள்ளது.

பிரான்சின் 101 முக்கிய மற்றும் கடல்கடந்த பகுதிகளில் இப்போது 28 பகுதிகள் ‘சிவப்பு மண்டலங்களாக’ கருதப்படுகின்றன.

இந்த 28 மண்டலங்களில் புதிய கொரோனா வைரஸ் வழக்குகளின் எண்ணிக்கையை குறைக்க அதிகாரிகள் விதிவிலக்கான நடவடிக்கைகளை விதிக்க முடியும்.

பிரான்சில் வெள்ளிக்கிழமை கிட்டத்தட்ட 9,000 கொரோனா வழக்குகள் பதிவாகியுள்ளது, சனிக்கிழமை கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 8,550 வழக்குகள் பதிவானது.

நாடு தழுவிய அளவில் கொரோனா உறுதியான விகிதம் 4.7 சதவீதமாக அதிகரித்துள்ளதை அடுத்து இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்