பிரான்சில் சிதைக்கப்படும் குதிரைகள்! 153 வழக்குகள் விசாரணையில் இருப்பதாக தகவல்

Report Print Santhan in பிரான்ஸ்

பிரான்சில் குதிரைகள் மீதான வன்முறைகள் பல மாதங்களாக நீடித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரான்சின் வெவ்வேறு மாவட்டங்களில் உள்ள குதிரைகள் நள்ளிரவில் தாக்கப்பட்டு, காயமேற்படுத்தப்பட்டு, சில வேளைகளில் கொல்லப்பட்டும் வருகின்றன.

கடந்த சில மாதங்களாக லியோன், மார்செய் உட்பட இல் து பிரான்ஸ் மாகாணத்திலும் பல சம்பவங்கள் இதுபோல் இடம்பெற்றுள்ளன.

இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வந்த பொலிசார், பல்வேறு நபர்களின் வாக்குமூலத்தை பெற்று கணனியின் உதவியோடு ஒரு நபரின் முகத்தை வரைந்துள்ளனர். இச்சம்பவத்தில் கடந்த வார இறுதியில் நபர் ஒருவரை சந்தேகத்தின் அடிப்படையில் கைதும் செய்திருந்தனர்.

இந்நிலையில், உள்துறை அமைச்சர் Gérald Darmanin மற்றும் விவசாய துறை அமைச்சர் Julien Denormandie ஆகியோர் Oise நகரில் உள்ள பண்ணை ஒன்றுக்கு நேற்று திங்கட்கிழமை செம்றிருந்த போது, அங்கு காயமேற்படுத்தப்பட்டிருந்த குதிரை ஒன்றை பார்வையிட்டனர்.

இச்சம்பவத்தில் தேசிய அளவிலான விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்த அவர்கள், இதுவரை 153 விசாரணைகள் இது தொடர்பாக இடம்பெற்று வருவதாக குறிப்பிட்டனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்