தங்கள் நாடு கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையிலும் கூட இந்தியா எங்களுக்கு உதவியது: நெகிழும் அமைச்சர்!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

தங்கள் நாடு கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையிலும் கூட இந்தியா எங்களுக்கு உதவியது என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார் பிரான்ஸ் நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சர்!

இந்தியாவில் கொரோனா உச்சத்தில் இருந்த நிலையிலும், எங்களுக்குத் தேவையான மருந்துகளை அனுப்பி இந்தியா எங்களுக்கு உதவியது என்கிறார் பிரான்ஸ் நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சரான ப்ளாரன்ஸ் பார்லி.

இந்தியாவின் உதவியால் நெகிழ்ந்த தாங்கள் பதிலுக்கு மருத்துவ உபகரணங்களை இந்தியாவுக்கு அனுப்பினதாக தெரிவிக்கிறார் அவர்.

ஐந்து ரஃபேல் போர் விமானங்களை இந்திய விமானப்படையில் இணைக்கும் நிகழ்ச்சிக்காக இந்தியா வந்திருந்தபோது, இந்த உதவியை மறவாமல் ப்ளாரன்ஸ் பார்லி நினைவுகூர்ந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்