உச்சம் தொட்ட கொரோனா! எதிர்த்துப் போராட பிரான்ஸ் எடுக்கப்போகும் கடுமையான நடவடிக்கை: கசிந்த தகவல்

Report Print Basu in பிரான்ஸ்

பிரான்சில் தினசரி கொரோனா வழக்குகளின் எண்ணிக்கை புதிய உச்சத்தை தொட்ட பின்னர் கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கு பிரான்ஸ் கடுமையான நடவடிக்கைகளை விதிக்க திட்டமிட்டுள்ளது.

வியாழக்கிழமை புள்ளிவிவரங்களின்படி, 24 மணி நேரத்தில் பிரான்சில் 10,000 புதிய வழக்குகள் பதிவானது.

புதிய நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்ய அமைச்சர்களுக்கும் சுகாதார நிபுணர்களுக்கும் இடையே ஒரு முக்கிய சந்திப்பு இன்று நடக்கிறது.

கடுமையான முடிவுகள் தேவைப்படலாம் என்று தொற்றுநோய் குறித்து அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கும் விஞ்ஞான சபைத் தலைவர் ஜீன்-ஃபிராங்கோயிஸ் டெல்ஃப்ரைஸி எச்சரித்துள்ளார்.

இந்த சந்திப்பு எதிர்வரும் வாரங்களில் என்ன நடக்கப்பபோகிறது என்பது குறித்து மக்களுக்கு தெளிவான கருத்தை வழங்கும் என ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் கூறினார்.

நாங்கள் முடிந்தவரை வெளிப்படையாகவும் தெளிவாகவும் இருக்க வேண்டும், எந்தவொரு பீதியையும் ஏற்படுத்தாமல் நாங்கள் யதார்த்தமாக இருக்க வேண்டும் என மக்ரோன் கூறினார்.

உலகில் கொரோனாவால் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்ட நாடுகள் பட்டியலில் பிரான்ஸ் ஏழாவது இடத்தில் உள்ளது. அங்கு 30,800-க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் இறந்துள்ளனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்