பிரான்சில் 6 வயது மகனை 5-வது தளத்தில் இருந்து தூக்கி வீசிய தந்தை! கதிகலங்க வைத்த சம்பவம்

Report Print Santhan in பிரான்ஸ்

பிரான்சில் தந்தை ஒருவர் தன்னுடைய மகனை குடியிருப்பின் ஐந்தாவது தளத்தில் இருந்து தூக்கி வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்சின் Choisy-le-Roi (Val-de-Marne) நகரில் வசித்து வரும் 37 வயது மதிக்கத்தக்க நபர், இன்று தனது மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில், இன்று அதிகாலை இருவருக்கிடையே வாக்குவாதம் எழுந்துள்ளது. மனைவியை குறித்த நபர் சரமாரியாக தாக்கியுள்ளார்.

அதைத் தொடர்ந்து குறித்த நபரின் மகனான 6 வயது சிறுவனையும் அவர் தாக்கியுள்ளார். குறித்த சிறுவன் அவரது முன்னாள் மனைவியின் மகன் ஆவான்.

அவனை சரமாரியாக தாக்கிவிட்டு, கட்டிடத்தின் ஐந்தாவது தளத்தில் உள்ள அவரது வீட்டில் இருந்து வெளியே தூக்கி வீசியுள்ளார். இதனால் தலையில் பலத்த காயமடைந்த சிறுவன் பரிசில் உள்ள Necker மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்