பிரான்சில் ஒரே நாளில் 10,000-க்கும் மேற்பட்டோரை தாக்கிய கொரோனா: மருத்துவர்கள் குழு எச்சரிக்கை

Report Print Basu in பிரான்ஸ்

கொரோனாவின் புதிய எழுச்சியைக் கட்டுப்படுத்த பிரான்ஸ் போராடி வரும் நிலையில், நாட்டில் பதிவாகும் தினசரி வழக்கு எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது

சனிக்கிழமையன்று 10,561 புதிய வழக்குகள் பதிவானதாக சுகாதார அதிகாரிகள் கூறினர், இது வெள்ளிக்கிழமை பதிவான வழக்குகளை விட 1,000-க்கும் மேல் அதிகரித்துள்ளது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் மற்றும் தீவிர சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

புதிய பரவலுக்கு மத்தியில் தனியார் கூட்டங்களைத் தவிர்க்குமாறும், தனியார் உலகில் கவனமாக இருக்க வேண்டிய நேரம் இது என மருத்துவர்கள் குழு மக்களை வலியுறுத்தியுள்ளது

சிறிய அறையில் குறைந்த காற்றோட்டத்தில் அதிகமான நபர்கள் இருப்பது மேலும் அபாயங்களை அதிகரிக்கும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

புதிய வழக்குகள் அதிகரிப்பதைக் காணும் பல ஐரோப்பிய நாடுகளில் பிரான்ஸ் ஒன்றாகும்.

நோய் பரவலை சமாளிக்க மார்ச் மாதத்தில் விதிக்கப்பட்ட கடுமையான கட்டுப்பாடுகளை கண்டம் முழுவதும் உள்ள அதிகாரிகள் தளர்த்தியதால், ஜூன் மாதத்தில் புதிய வழக்குகள் அதிகரிக்க தொடங்கின, கடந்த மாதத்தில் வழக்கு கணிசமாக உயர்ந்தன.

பிரான்சில் பாரிஸ், லியோன் மற்றும் கிட்டத்தட்ட முழு மத்திய தரைக்கடல் கடற்கரை பகுதி என மொத்தம் 42 பகுதிகளை சிவப்பு மண்டலங்களாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்