பிரான்சில் 81 பள்ளிகள் மூடல்! ஏதற்காக? அரசாங்கம் வெளியிட்ட தகவல்

Report Print Basu in பிரான்ஸ்

பிரான்சில் மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் உறுதியான பின்னர் நாட்டில் மொத்தம் 81 பள்ளிகள் மூடப்பட்டுள்ளன என கல்வி அமைச்சர் ஜீன்-மைக்கேல் பிளாங்கர் தெரிவித்தார்.

ஆகஸ்ட் முதல் பிரான்சில் கொரோனா வைரஸ் வழக்குகள் அதிகரித்து வரும் நிலையில் கடந்த வார தொடக்கத்தில் மாணவர்களுக்கு கொரோனா உறுதியானதை அடுத்து 28 பள்ளிகள் மூடப்பட்டது.

தற்போது பிரான்சில் மொத்தம் 81 பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாகவும், மேலும் 2,100 தனிப்பட்ட வகுப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஜீன்-மைக்கேல் பிளாங்கர் தெரிவித்தார்.

மூன்று வழக்குகள் உறுதியானவுடன் வகுப்புகள் நிறுத்தப்படுகின்றன. கடந்த வாரத்துடன் ஒப்பிடும்போது மாணவர்களிடையே சுமார் 1,200 பேருக்கு புதிதாக கொரோனா வழக்குகள் பதிவாகியுள்ளன என்று அவர் கூறினார்.

83 பேருக்கு கொரோனா உறுதியான பிறகு இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மருத்துவ மாணவர்களுக்கான வகுப்புகளை ரென்ஸ் பல்கலைக்கழகம் இந்த வாரம் நிறுத்தியது.

சனிக்கிழமையன்று, நாட்டில் 10,000 க்கும் மேற்பட்ட வழக்குகள் உறுதி செய்யப்பட்டன. வழக்குகள் அதிகரித்த பின்னர் போர்டியாக்ஸ் மற்றும் மார்சேய் நகரங்களில் ஏற்கனவே கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்