மாலை மயங்கும் நேரத்தில் 689 அடி உயர கட்டிடத்தில் வெறுங்கைகளால் ஏறிய நபர்: தற்கொலை முயற்சியா?

Report Print Balamanuvelan in பிரான்ஸ்
3353Shares

பிரான்சில் அடிக்கடி ஒரு நபர் உபகரணங்கள் உதவியின்றி உயரமான கட்டிடங்களில் ஏறுவதுண்டு.

Alain Robert (58) என்னும் அவரை பிரெஞ்சு ஸ்பைடர்மேன் என்றே அழைப்பார்கள். இப்போது அவருக்கு போட்டியாக இன்னொருவர் தோன்றியிருக்கிறாரோ என்னவோ, மத்திய பாரீசிலேயே உயரமான கட்டிடம் ஒன்றில் மாலை 7 மணியளவில் ஒருவர் ஏறுவதைக் கண்ட மக்கள், வழக்கம்போல மொபைலில் வீடியோவும் புகைப்படமும் எடுத்து சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்தாலும், சிலர் பொலிசாருக்கும் தகவலளித்துள்ளனர்.

சைரன் ஒலித்தபடி பொலிஸ் வாகனங்களும் ஆம்புலன்ஸ் வாகனங்களும் சம்பவ இடத்துக்கு உடனடியாக விரைந்துள்ளன.

சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர், முதலில் அது தற்கொலை முயற்சி என முதலில் சிலர் நினைத்தாலும், அவர் தொடர்ந்து அபாயகரமான வகையில் ஏறிக்கொண்டே இருந்ததாக தெரிவிக்கிறார்.

சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள வீடியோக்களில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர், 689 அடி உயரமுள்ள Montparnasse Tower என்ற கட்டிடத்தின் மீது கைகளில் எந்த உபகரணங்களுமின்றி ஏறுவதைக் காணலாம்.

அவர் கிட்டத்தட்ட உச்சியை அடைந்த நிலையில், பொலிசாரில் ஒருவர் என கருதப்படும் மீட்புக்குழுவைச் சார்ந்த ஒருவர், கயிறுகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள்

உதவியுடன் இறங்கி, அந்த நபரை பாதுகாப்பாக மீட்டு கட்டிடத்தின் உச்சிக்கு அழைத்துச் சென்றார்.

அங்கே தயாராக நின்ற பொலிசார் அவரை கைது செய்து அழைத்துச் சென்றனர். அது பிரெஞ்சு ஸ்பைடர்மேன் என்று அழைக்கப்படும் Alain Robertதானா என்பது குறித்து தெரியவில்லை.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்