பிரான்சில் மாணவர்களிடையே கொரோனா பரவ வாய்ப்பிருப்பதாக கூறி, பாரிசில் இருக்கும் Sciences Po கல்லூரி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ்,பிரித்தானியா போன்ற நாடுகளில் கொரோனா பாதிப்பு தீவிரம் அடைந்து வருகிறது.
இதனால் நாட்டில் கொரோனாவின் 2-வது அலை பரவி விடக் கூடாது என்பதற்காக, பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பிரான்சில் மாணவர்களிடையே கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், தலைநகர் பாரிசில் இருக்கும் Sciences Po கல்லூரி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களிடையே கொரோனா தொற்று அதிகரித்ததை அடுத்து இந்த முடிவு எட்டப்பட்டுள்ளதாக நிர்வாகம் அறிவித்துள்ளது. இங்கு பயிலும் மாணவர்களில் கிட்டத்தட்ட 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்தே அடுத்த 14 நாட்களுக்கு இந்த கல்லூரி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு Online மூடம் பாடநெறிகளை கற்றுக்கொடுப்பதற்குரிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.