பிரான்ஸ் தலைநகர் பாரிசில் முகக்கவசம் அணிவது குறித்த கட்டுப்பாடு ஒரு பகுதியாக தளர்த்தப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸின் இரண்டாவது அலை காரணமாக, ஐரோப்பிய நாடுகள் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் பிரான்சில் பயணிப்போருக்கு முகக்கவசம் கட்டாயமில்லை என அறிவிக்கப்பட்டதை அடுத்து, தற்போது இருசக்கர வாகனங்களில் முழு தலைக்கவசம் அணிந்து பயணிப்போருக்கும் முகக்கவசம் கட்டாயமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை திங்கட்கிழமை நண்பகல் 12 மணியில் இருந்து இந்த புதிய தளர்வு நடைமுறையில் இருக்கும். இந்த அறிவிப்பை பரிஸ் காவல்துறை தலைமை செயலகம் வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.