மீண்டும் அதிகரிக்கும் கொரோனா! பிரான்ஸ் தலைநகரில் புதிய கட்டுப்பாடுகள் அமல்: வெளியான முக்கிய அறிவிப்பு

Report Print Basu in பிரான்ஸ்

பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் மற்றும் அதை சுற்றியுள்ள பிராந்தியத்தில் கொரோனா வழக்குகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் புதிய கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பிரான்சில் தற்போது வரை 5,07,150 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 31,426 பேர் பலியாகியுள்ளனர்.

மார்சேய், போர்டியாக்ஸ், லியோன் மற்றும் நைஸ் நகரங்களில் வழக்குகள் அதிகரித்ததால் கட்டுப்பாடுகளை கடுமையாக்க உள்ளூர் அதிகாரிகளிக்கு உத்தரவிடப்பட்டது.

அதேசமயம் தலைநகர் பாரிஸ் மற்றும் அதைச் சுற்றியுள்ள பிராந்தியத்தில் வழக்கு எண்கள் அதிகமாக இருந்தாலும் கூடுதல் கட்டுப்பாடுகள் தவிர்க்கப்பட்டு வந்தது.

பாரிஸில் உள்ள உள்ளூர் அதிகாரிகள் ஏற்கனவே உள்ளூர் முகக் கவச விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளனர், தலைநகரின் அனைத்து பொது வெளிப்புற பகுதிகளிலும் அதன் சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகளிலும் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும்.

தற்போது, கொரோனா வழக்குகள் அதிகரித்து வருவதால் பாரிஸில் அனைத்து உட்புற பொது இடங்களிலும் முகக் கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பாரிஸில் உட்புற பொது இடங்களில் முகக் கவசம் அணிய தவறினால் 135 யூரோ அபராதம் விதிக்கப்படும் என பாரிஸில் உள்ள உள்ளூர் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்