பள்ளி மாணவிகள் கடற்கரைக்கு செல்வதுபோல் உடை அணியக்கூடாது: அமைச்சரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்க பெண்கள் செய்த மோசமான செயல்

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிரான்சில் மாணவிகள் குட்டைப்பாவாடையும் ஆழமான கழுத்துடைய சட்டையும் அணிவதை விமர்சித்த அமைச்சருக்கு எதிர்ப்பு தெரிவிக்க பெண்கள் மோசமான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

பிரான்ஸ் கல்வி அமைச்சர் Jean-Michel Blanquer, மாணவிகள் republican styleஇல் உடை அணியவேண்டும், மற்றவர்களை தூண்டும் வகையில் உடை அணியக்கூடாது, கடற்கரைக்கோ, இரவு விடுதிக்கோ செல்வதுபோல் உடை அணியக்கூடாது என்று கூறிய கருத்தால் கடும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

அத்துடன், republican style என்றால் என்ன என்று கேள்வி எழுப்பியுள்ள பெண்கள், அவரை சமூக ஊடகங்களில் கேலி செய்து வருகிறார்கள்.

பாடகியான Jeanne Cherhal, மூவர்ணக்கொடியை மட்டும் உடலில் சுற்றிக்கொண்டு நிர்வாணமாக போஸ் கொடுத்துள்ளார்.

AFP/Getty Images

அதேபோல் பிரபல ஓவியரான Eugène Delacroix வரைந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க, மூவர்ணக்கொடியுடன் மேலாடை இன்றி இருக்கும் பெண்ணின் படத்தையும் சமூக ஊடகங்களில் பரப்பி வருகிறார்கள் பெண்கள்.

அத்துடன் இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பெண்களுக்கு பிரான்சின் குடியுரிமை அமைச்சரான Marlène Schiappa, அவர்களுக்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஒரு குறிப்பிட்ட நாளில் பிரான்சிலுள்ள இளம்பெண்கள் அனைவரும் குட்டைப்பாவாடைகள், ஆழமான கழுத்துடைய சட்டைகளுடன் மேக் அப்பும் அணிந்துகொள்ள தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ள அவர், அவர்களுக்கு தானும் ஆதரவு தெரிவிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்