ஈபிள் கோபுரத்திலிருந்தவர்கள் திடீர் வெளியேற்றம்: மர்ம நபர் தொலைபேசி மிரட்டலையடுத்து பாரீஸில் பரபரப்பு

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

மர்ம தொலைபேசி அழைப்பு ஒன்றைத் தொடர்ந்து ஈபிள் கோபுரம் மற்றும் அதன் சுற்றுபகுதியிலிருந்தவர்கள் அவரச அவசரமாக வெளியேற்றப்பட்ட சம்பவம் பாரீஸில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பத்திரிகையாளர் ஒருவர், தொலைபேசியில் அழைத்த மர்ம நபர் ஒருவர் அல்லாஹூ அக்பர் என சத்தமிட்டுவிட்டு, வெடிகுண்டு வைத்திருப்பதாகவும் எல்லாவற்றையும் வெடித்துச் சிதறச் செய்ய இருப்பதாகவும் மிரட்டியதாக தெரிவித்துள்ளார்.

அதைத் தொடர்ந்து ஈபிள் கோபுரம் மற்றும் அதன் சுற்றுபகுதியிலிருந்தவர்கள் அவரச அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.

அங்கு பொலிசாரும் வெடிகுண்டு நிபுணர்களும் குவிக்கப்பட்ட நிலையில், இரண்டு மணி நேரங்களுக்கு அவர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால் சந்தேகத்துக்குரிய வகையில் எதுவுமே கண்டுபிடிக்கப்படவில்லை என தெரியவந்துள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்