பிரான்சில் ஜனாதிபதியின் முன்னாள் மெய் பாதுகாவலருக்கு கொரோனா உறுதி! வெளி வரும் முக்கிய தகவல்

Report Print Santhan in பிரான்ஸ்

பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் முன்னாள் மெய் பாதுகாவலரான Alexandre Benalla இற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் இந்த கொரோனா வைரஸ் அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப்பிரபலங்கள், சாதரண மக்கள் என அனைவரையும் தாக்கி வருகிறது.

இந்த கொரோனா காரணமாக திரைப்பிரபலங்கள் பலர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், தற்போது பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரானின் முன்னாய் மெய் பாதுகாவலரான Alexandre Benalla இற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Alexandre Benalla கொரோனாபரிசில் உள்ள Cochin மருத்துவனனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நலம் குறித்த மேலதிக தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

Alexandre Benalla கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, மெய் பாதுகாவலராக இருந்த இவர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த ஒருவரை தாக்கியிருந்ததால், பெரும் சர்ச்சைகளுக்குப் பின்னர் அவர் பதவி விலக்கப்பட்டிருந்தது நினைவுகூரத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்