4 வாரங்களில் ஏதுவும் மாறாவிட்டால் பிரான்சின் கதி இது தான்: நாட்டின் உயர்மட்ட மருத்துவ நிபுணர் எச்சரிக்கை

Report Print Basu in பிரான்ஸ்

ஏதுவும் மாறாவிட்டால் பிரான்ஸ் ஒரு மாத கால கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்கொள்ளும், அது அதன் சுகாதார அமைப்பை நெருக்கடிக்குள்ளாக்கும் என்று நாட்டின் உயர்மட்ட மருத்துவ நிபுணர்களில் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாம் நினைத்ததை விட இரண்டாவது அலை வேகமாக வந்து கொண்டிருக்கிறது என்று டாக்டர்களின் ஆணைக்கான தேசிய கவுன்சிலின் தலைவர் பேட்ரிக் பூட் தெரிவித்தார்.

மார்சேய் மற்றும் பாரிஸ் பகுதி உட்பட நாட்டின் மிக மோசமான பாதிப்புக்குள்ளான பகுதிகளில் நோய் பரவுவதை மெதுவாக்குவதற்கான புதிய கட்டுப்பாடுகள் உள்ளூரில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

சுகாதார அமைச்சர் ஆலிவர் வேரன் இந்த வாரம் வழங்கிய எச்சரிக்கைகள் போதுமானதாக இல்லை என்று பூட் தெரிவித்தார்.

மூன்று முதல் நான்கு வாரங்களில் எதுவும் மாறாவிட்டால், பல மாதங்களுக்கு பிரான்ஸ் முழுவதும் கொரோனா பரவும் என்று சுகாதார அமைச்சர் கூறவில்லை என பூட் கூறினார்.

சிகிச்சை வழங்க மருத்துவ ஊழியர்கள் யாரும் இருக்க மாட்டார்கள், பிரான்சின் சுகாதார அமைப்பு அதன் மீது வைக்கப்பட்டுள்ள அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற முடியாது என்று எச்சரித்தார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்