பிரான்ஸ் தலைநகர் பாரிசில் இன்று வாகனங்கள் இல்லாத நாளாக கடைபிடிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாரிசில் கடந்த ஆண்டு இருந்து வாகனங்கள் இல்லாத நாள் என்ற நிகழ்வு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன் படி செப்டம்பர் 27-ஆம் திகதி அதாவது இன்று 6-வது தடவையாக இந்த நிகழ்வு இடம் பெறுகிறது.
இதன் காரணமாக இன்று காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை பரிசுக்குள் எங்கேயும் வாகனங்களில் பயணிக்க முடியாது.
இதில் வாகனங்கள் , இரு சக்கர வாகனங்களும் அடங்குகின்றன. ஆனால் மிதிவண்டிகள் மற்றும் நடை பயணங்கள் தாராளமாக வரவேற்கப்படுகின்றன.
இந்த விதிமுறைகளை மீறினால், 135 யூரோ அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.