கஞ்சா திருடி பிடிபட்ட திருடர்களுக்கு காத்திருந்த மிகப்பெரிய ஏமாற்றம்

Report Print Balamanuvelan in பிரான்ஸ்
144Shares

தென்மேற்கு பிரான்சில் கஞ்சா திருடி பிடிபட்டார்கள் ஆறு பேர். ஆனால் அவர்கள் மீது திருட்டு மற்றும் ஆயுதத்துடன் வன்முறையில் ஈடுபடுதல் ஆகிய குற்றச்சாட்டுகள்தான் பதிவுசெய்யப்பட்டன. போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டு பதிவு செய்யப்படவில்லை.

இப்படி ஒரு விந்தையான வழக்கு, பிரான்சின் Nouvelle Aquitaine என்ற பகுதியில் நீதிமன்றத்துக்கு வந்தது. பண்ணை ஒன்றில் நுழைந்த ஆறு பேர், அங்கிருந்து ஏராளம் கஞ்சா பயிர்களை அறுத்துச் சென்றனர்.

அப்போது அவர்கள் வசமாக பொலிசாரிடம் சிக்கினார்கள். ஆனால், பொலிசாரிடம் சிக்கியபிறகுதான் அவர்களுக்கு தெரிந்தது, தாங்கள் அறுவடை செய்துவந்தது கஞ்சா பயிர் அல்ல, சணல் பயிர் என்று! காகிதம், துணி, உடைகள், மக்கும் பிளாஸ்டிக், பெயிண்ட், பசுமை எரிபொருள் மற்றும் விலங்குகளுக்கு உணவாக பயன்படும் சணல் பயிரும், போதைப்பொருளாக பயன்படுத்தப்படும் கஞ்சா செடிகளும் பார்ப்பதற்கு ஒரே மாதிரிதான் இருக்கும்.

ஆகவே, இந்த ஆறு திருடர்களும், கஞ்சா செடிகளை திருடுவதாக எண்ணி, சணல் பயிரை அறுத்துச் சென்றுள்ளார்கள்.

கஞ்சா கிடைக்காவிடாலும் திருட்டு திருட்டுதானே, சும்மா விடுவார்களா பொலிசார்? அந்த ஆறு பேரையும் கைது செய்து காவலில் அடைத்திருக்கிறார்கள். அவர்கள் நவம்பரில் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளார்கள்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்