பிரான்சில் சிறிய ரக விமானம் விபத்து! மூன்று பேர் பலி

Report Print Santhan in பிரான்ஸ்
89Shares

பிரான்சில் சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில், மூன்று பேர் பலியாகியுள்ளனர்.

பிரான்சில் Caen நகரில் இருந்து La Vèze நகருக்கு, சிறிய ரக விமானம் ஒன்று மூன்று பேருடன் இன்று காலை புறப்பட்டுள்ளது.

விமானம் Gennes மற்றும் La Chevillotte நகரங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் சென்ற போது, திடீரென விபத்தில் சிக்கியதால், இது குறித்த தகவல் உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர், மூன்று பேரையும் காப்பாற்ற போராடியுள்ளனர். ஆனால் விமானத்தில் இருந்த மூன்று பேரும் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்துவிட்டனர்.

குறித்து விபத்தானது Doubs மாவட்டத்தில் இன்று காலை உள்ளூர் நேரப்படி 10 மணிக்கு ஏற்பட்டுள்ளதாகவும், இந்த விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்