குழந்தைகள் பயப்படுகிறார்கள்: பிரான்சில் ஆசிரியரை வேலையை விட்டு நீக்கிய நிர்வாகம்

Report Print Arbin Arbin in பிரான்ஸ்
782Shares

பிரான்சில் உடல் முழுவதும் டாட்டூ பதித்துள்ள ஆசிரியர் ஒருவரை பிள்ளைகள பயப்படுவதாக கூறி ஒரு பிரஞ்சு மழலையர் பள்ளி நிர்வாகம் கற்பிப்பதில் இருந்து அவரை தடுத்துள்ளது.

பாலிசோ பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் மழலையர்களுக்கு ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார் 35 வயதாகும் சில்வைன் ஹெலைன்.

ஆனால் தங்களின் பிள்ளைகள் தற்போது கெட்ட கனவால் தூக்கமின்றி அவதிப்படுவதாகவும், இதற்கு சில்வைன் ஹெலைன் உடல் முழுவதும் பதித்துள்ள டாட்டூவே காரணம் எனவும் பெற்றோர்கள் பாடசாலை நிர்வாகத்தை அணுகி புகார் அளித்துள்ளனர்.

இதனையடுத்து அந்த பாடசாலை நிர்வாகம் சில்வைன் ஹெலைன் மழலையர்களுக்கு கற்பிப்பதில் இருந்து விடுவித்துள்ளதுடன், ஆறு வயதுக்கு மேற்பட்ட மாணாக்கர்களுக்கு அவர் கற்பிக்கலாம் என அறிவுறுத்தியுள்ளது.

பாரிஸ் நகரில் பிறந்த சில்வைன் ஹெலைன் தமது 27 ஆம் வயதில் இருந்தே டாட்டூ மீது ஆர்வம் கொண்டு தமது உடல் முழுவதும் பதித்துக் கொண்டுள்ளார்.

இதற்காக அவர் இதுவரை 460 மணி நேரம் செலவிட்டுள்ளதுடன் கட்டணமாக 35,000 பவுண்டுகளும் செலுத்தியுள்ளார்.

தம்மீதான புகார் தொடர்பில் பேசிய சில்வைன் ஹெலைன், தன்னை அறிந்தவர்களுக்கு எவ்வித பிரச்சனையும் இல்லை எனவும், ஆனால் தூரத்தில் இருந்து கண்காணிப்பவர்களுக்கு நான் மோசமாக தெரிவதாக குறிப்பிட்டுள்ளார்.

தற்போது ஆரம்ப பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருவதாகவும், தமக்கு இந்த மாறுதல் ஆறுதலாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்