பிரான்ஸ் தலைநகரை அதிர வைத்த மிக பயங்கரமான சத்தம்: என்ன நடந்தது? பொலிஸ் வெளியிட்ட தகவல்

Report Print Basu in பிரான்ஸ்

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் குண்டு வெடித்தது போல் பயங்கர சத்தம் கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாரிஸ் மற்றும் அருகிலுள்ள புறநகர்ப் பகுதிகள் முழுவதும் பயங்கர சத்தம் கேட்டது, ஆனால், எங்கிருந்து வந்தது என்று தெரியாமல் பலர் குழம்பி தவித்தனர்.

இந்நிலையில் இந்த சத்தம் எங்கிருந்து வந்தது என்பது தொடர்பில் பொலிசார் தெளிவுப்படுத்தியுள்ளனர்.

பாரிஸிலும் பாரிஸ் பிராந்தியத்திலும் மிக பயங்கரமான சத்தம் கேட்டது. இது குண்டுவெடிப்பு இல்லை.

இது ஒலித் தடையை மீறி அதிவேகமாக போர் விமானம் பறந்ததால் ஏற்பட்ட சத்தம்.

விமானத்தின் வேகம் ஒலியின் வேகத்தை மீறும் போது இந்த சத்தம் ஏற்படுகிறது, அது விமானம் ஒலித் தடையை மீறியதாக கூறப்படுகிறது என பொலிசார் விளக்கமளித்துள்ளனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்