பிரான்சில் இனிமேல் இதற்கு தடை: சுற்றுச்சூழல் அமைச்சர்

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

இடம் விட்டு இடம் நகரும் சர்க்கஸ்களில் வன விலங்குகளை பயன்படுத்துவதற்கும், டால்பின் மற்றும் திமிங்கலங்களை அடைத்துவைப்பதற்கும் தடை விதிக்க இருப்பதாக பிரான்ஸ் சுற்றுச்சூழல் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நேற்று பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் பேசிய பிரான்ஸ் சுற்றுச்சூழல் அமைச்சரான Barbara Pompili, கரடிகள், புலிகள், சிங்கங்கள், யானைகள் மற்றும் பிற வன விலங்குகளை இடம் விட்டு இடம் நகரும் சர்க்கஸ்களில் பயன்படுத்துவதற்கு வரும் ஆண்டுகளில் அனுமதியில்லை என்று கூறினார்.

மேலும், பிரான்சின் மூன்று கடல் காட்சியகங்களில் டால்பின்கள் மற்றும் killer whales வகை திமிங்கலங்களை இனப்பெருக்கம் செய்ய உடனடியாக தடை விதிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

அதே நேரத்தில், ஒரே இடத்தில் நிரந்தரமாக இருக்கும் சர்க்கஸ் மற்றும் உயிரியல் பூங்காக்களுக்கு இந்த தடை பொருந்தாது.

மேலும், இந்த தடைகள் விதிப்பதற்கு குறிப்பிட்ட திகதி எதையும் Pompili குறிப்பிடவில்லை, கூடுமான விரைவில், ஒவ்வொரு விலங்குக்கான பிரச்சினைகளுக்கும் படிப்படியாக தீர்வு காணப்படும் என்றார் அவர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்