முழு ஊரடங்கில் பிரான்ஸ் தலைநகர் பாரிஸ்: வெளியாகும் புதிய தகவல்

Report Print Arbin Arbin in பிரான்ஸ்

கொரோனா பரவலின் அதி உச்ச நிலையை பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் எட்டியுள்ளதாக நாட்டின் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பாரிஸ் நகரின் தற்போதைய சூழல் தொடர்பில் பேசிய சுகாதார அமைச்சர் ஆலிவர் வேரன், கொரோனா பரவல் தொடர்பில் அதன் உச்ச நிலையில் மேற்கொள்ளவேண்டிய எச்சரிக்கையை பாரிஸ் நகரம் மூன்று முறை கடந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், வார இறுதியில் நிலைமை மேம்படாவிட்டால், நோய் பரவுவதைத் தடுக்கும் புதிய நடவடிக்கைகளை விரைவில் விதிக்கப்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் தலைநகரில் செயல்பட்டுவரும் எல்லா மதுபான விடுதிகள் மற்றும் உணவகங்களை மூட உத்தரவிடப்படும் என்று அமைச்சர் ஆலிவர் வேரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நடைமுறை திங்கள் முதல் அமுலுக்கு கொண்டுவரப்படலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இருப்பினும், கொரோனா வைரஸ் ஊரடங்கு நடவடிக்கைகளை மீறுபவர்களுக்கு வேறு சில நாடுகளைப் போல பெரிய அபராதம் அல்லது சிறைத் தண்டனையுடன் அமுலுக்கு கொண்டுவர பிரான்சுக்கு எந்த திட்டமும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் 12 ஆம் திகதி ஒரே நாளில் நாடு முழுவதும் 10,000 க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக முதன்முறையாக கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்