மாலியில் கடத்தப்பட்ட பிரெஞ்சு குடிமகள்: எதிர்பாராத நேரத்தில் விடுவிப்பு

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

சற்றும் எதிர்பாராத நேரத்தில், மாலியில் கடத்தப்பட்ட பிரெஞ்சு குடிமகள் ஒருவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

2016இல் மாலியில் கடத்தப்பட்ட தொண்டு நிறுவன ஊழியரான Sophie Petronin (75) திடீரென விடுவிக்கப்பட்டுள்ளார்.

விடுவிக்கப்பட்ட Sophieயை மாலியின் தலைநகர் பாமக்கோவில் கட்டியணைத்து வரவேற்றார் அவரது மகன்.

எதனால் பிணைக்கைதிகள் திடீரென விடுவிக்கப்பட்டார்கள் என்பது தொடர்பாக மாலி அரசு எந்த விளக்கமும் அளிக்கவில்லை. பிணைக்கைதிகளாக வைக்கப்பட்டிருந்த 100 பேருக்கும் அதிகமானவர்கள் சென்ற வார இறுதியில் விடுவிக்கப்பட்டுள்ளார்கள்.

Sophieயின் விடுதலை தனக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளதாக தெரிவித்துள்ள பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், Sophieயை பிரான்சுக்கு மீண்டும் வரவேற்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.

2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24ஆம் திகதி Gao நகரில் சிறுவர்கள் தொண்டு நிறுவனம் ஒன்றிற்காக பணியாற்றிக்கொண்டிருந்தபோது Sophieயை துப்பாக்கி முனையில் தீவிரவாதிகள் சிலர் கடத்திச் சென்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்