பிரான்சில் இலங்கையர்கள் 5 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம்! கொலைகாரன் குறித்து வெளியான தகவல்

Report Print Santhan in பிரான்ஸ்

பிரான்சில் குடும்ப பிரச்சனை காரணமாக நடந்த சம்பவத்தில் இலங்கையர்கள் ஐந்து பேர் பலியான நிலையில், இந்த கொலைக்கு காரணமான கொலைகாரர் மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிரான்ஸ் தலைநகர் பாரிசின் Noisy-le-Sec, (Seine-Saint-Denis) நகரின் rue Emmanuel Arago வீதியில் சில தினங்களுக்கு முன்பு இளைஞன் ஒருவன் படுகாயங்களுடன், அங்கிருக்கும் கடை ஒன்றில் இருக்கும் நபரிடம் என்னுடைய மாமா வீட்டில் இருக்கும் அனைவரையும் கத்தி மற்றும் சுத்தியலால் கொடூரமாக தாக்கிவிட்டார், உதவும் படி கேட்க, அதன் பின் இது குறித்து தகவல் பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து பொலிசார் அந்த வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது, ஐந்து பேர் உயிரிழந்த நிலையிலும், 5 பேர் சுயநினைவுற்ற நிலையிலும் இருப்பதை கண்டு பொலிசார், உடனடியாக இறந்தவர்களின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்கும், காயமடைந்து கிடந்தவர்களின் உடலை மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவத்திற்கு காரணமான கொலைகாரர் கோமா நிலை மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் இலங்கை வம்சாவளியை சேர்ந்தவர் எனவும், உயிரிழந்த 5 பேரும் இலங்கையர்கள் என்பதும் தெரியவந்தது.

இந்நிலையில், கோமா காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கொலைகாரன், நேற்று மனநல மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதும், கொலைகள் தொடர்பாக, எவ்வித விசாரணையும் மேற்கொள்ளப்படவில்லை.

இதன் காரணமாக கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து அறியமுடியவில்லை என அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், மருத்துவமனையில் இருந்து மனநல மருத்துவமனைக்கு கொலைகாரன் தன்னிச்சையாக மாற்றப்பட்டுள்ளதாகவும், கொலைகாரனுக்கு இது தொடர்பாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்