நடுவானில் மோதிய இரண்டு சுற்றுலா விமானங்கள்... பயணிகளின் நிலை? பிரான்சில் அதிர்ச்சி சம்பவம்

Report Print Arbin Arbin in பிரான்ஸ்

பிரான்சில் சுற்றுலா விமானங்கள் இரண்டு நடு வானில் மோதிக்கொண்டதில் 5 பேர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இருவர் பயணிக்கக் கூடிய இலகுரக விமானம் ஒன்று சனிக்கிழமை மாலை உள்ளூர் நேரப்படி சுமார் 4.45 மணியளவில் சுற்றுலா விமானம் ஒன்றுடன் நடுவானில் மோதியுள்ளது.

இதில் இரண்டு விமானத்திலும் சேர்த்து பயணம் செய்தவர்களில் ஐவர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

விபத்தில் சிக்கிய சுற்றுலா விமானமானது லோச்சஸிலிருந்து 100 கி.மீ தொலைவில் அமைந்துள்ள போய்ட்டியர்ஸ் நகரத்திலிருந்து புறப்பட்டது என தெரிய வந்துள்ளது.

ஆனால் அந்த இலகுரக விமானம் எங்கிருந்து புறப்பட்டு வந்தது என்பது தொடர்பில் தகவல் ஏதும் வெளியாகவில்லை.

இந்த இரண்டு விமானங்களும் நடுவானில் மோதிக்கொண்ட நிலையில், ஒரு விமானமானது குடியிருப்பு ஒன்றில் வேலியுடன் மோதி நின்றுள்ளது.

இன்னொரு விமானம் பல நூறு மீற்றர்கள் தொலைவில் ஆள் ஆரவாரமற்ற பகுதியில் விழுந்துள்ளது.

இந்த விமான விபத்தில் பொதுமக்களுக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விபத்து தொடர்பில் தகவல் வெளியானதும் சுமார் 50 தீயணைப்பு வீரர்களும் முப்பதுக்கும் மேற்பட்ட பொலிசாரும் சம்பவ பகுதியில் குவிந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இந்த துயர விபத்துக்கான காரணத்தை கண்டறிய விசாரணைகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்