பிரான்சில் கொரோனா தொற்றுடன் வேலை செய்து வரும் மருத்துவர்கள்! பேரதிர்ச்சி தரும் தகவல்

Report Print Santhan in பிரான்ஸ்

பிரான்ஸ் நகர் ஒன்றில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தொடர்ந்து வேலை செய்து வரும் சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனாவின் இரண்டாவது அலை ஐரோப்பிய நாடுகளில் பரவுவதற்கு அதிகம் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக சில ஐரோப்பிய நாடுகள் கொரோனா தொற்று பரவல் குறைந்தாலும், கட்டுப்பாடுகளை தொடர்ந்து பின்பற்றி வருகின்றன.

இருப்பினும், பிரான்ஸ் மற்றும் பிரித்தானியாவில் கொரோனா பரவல் கடந்த சில தினங்களாக அதிகரித்தே காணப்படுகிறது. குறிப்பாக நேற்று மட்டும் கடந்த 24 மணி நேரத்தில், குறிப்பாக பிரான்சில் முன்பு எப்போதும் இல்லாத வகையில், கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை புதிய உச்சத்தை தொட்டது.

ஒரே நாளில் 20,339 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், தற்போது, Nantes நகரின் அரசினர் வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ள வைத்தியர்களும், ஊழியர்கள் சிலருக்கும் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையிலும் தொடர்ந்து நோயாளிகளிற்குச் சிகிச்சை அளித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கொரோனாத் தொற்றுடன் பணியாற்றும் படியான ஆணையையும் அனுமதியையும், பொதுமக்கள் சுகாதார உயர் ஆணையமான Haut Conseil de Santé Publique வழங்கி உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்