பிரான்சில் கொரோனா இரண்டாவது அலை... நேரலையில் முக்கிய அறிவிப்புகளை வெளியிடுகிறார் பிரான்ஸ் ஜனாதிபதி

Report Print Balamanuvelan in பிரான்ஸ்
பிரான்சில் கொரோனா இரண்டாவது அலை... நேரலையில் முக்கிய அறிவிப்புகளை வெளியிடுகிறார் பிரான்ஸ் ஜனாதிபதி

பிரான்சில் கொரோனா இரண்டாவது அலை குறித்து பிரதமர் எச்சரித்துள்ள நிலையில், பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் நேரலையில் தோன்றி முக்கிய அறிவிப்புகளை வெளியிட இருக்கிறார்.

நாளை மாலை மக்கள் முன் நேரலையில் தோன்ற இருக்கும் மேக்ரான், கொரோனா குறித்தும், அதனால் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் சமூக தாக்கம் குறித்தும் உரையாற்ற இருப்பதுடன், பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கும் விடையளிக்க உள்ளார்.

உண்மை என்னவென்றால், இரண்டாவது அலை உருவாகிவிட்டது, இதில் இனி சப்பைக்கட்டு

கட்டுவதற்கு ஒன்றுமில்லை என பிரான்ஸ் பிரதமர் கூறும் அளவுக்கு பிரான்சில் கொரோனா நிலைமை மோசமாகியுள்ள நிலையில், ஜனாதிபதி மக்கள் முன் நேரலையில் உரையாற்ற இருக்கிறார்.

தாங்கள் கொரோனாவின் இரண்டாவது அலையை எப்படியாவது தடுத்துவிட விரும்புவதாக மேக்ரான் உட்பட பிரான்ஸ் நாட்டு அரசியல் தலைவர்கள் கூறிக்கொண்டே இருந்தார்கள்.

என்றாலும், பாரீஸ், மார்சியெல் உட்பட அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கொரோனா தொற்றின் எண்ணிக்கையும், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருவதையடுத்து உள்ளூர் மட்டத்தில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

நிலைமையில் முன்னேற்றம் காணப்படவில்லையானால், உள்ளூர் மட்டத்தில் ஊரடங்கை தவிர்க்க இயலாது என பிரதமர் Castex நேற்று தெரிவித்தார்.

இத்தகைய சூழலில்தான், நாளை மாலை 7.55க்கு பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் உரையாற்ற இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்