பிரான்சில் மின்சார கார் வாங்குபவர்களுக்கு அரசு உதவி தொகை அறிவிப்பு! எவ்வளவு தெரியுமா? முக்கிய தகவல்

Report Print Santhan in பிரான்ஸ்

பிரான்சில் மின்சார கார் வாங்குபவர்களுக்கு 6000 யூரோக்கள் உதவி அளிப்பதாக அரசு உறுதி அளித்துள்ளது.

போக்குவரத்துறை அமைச்சர் Jean-Baptiste Djebbari நேற்று இது குறித்து கூறுகையில், சுற்றுச்சூழல் நண்பன் என அழைக்கப்படும் மின்சார மகிழுந்துகளை வாங்குபவர்களுக்கு அரசு உதவி தொகை வழங்க உள்ளது.

புத்தம் புதிய மின்சார வாகனம் வாங்குபவர்களுக்கு 6,000 யூரோக்களும், இரண்டாம் உரிமையாளராக வாகனத்தை நீங்கள் வாங்கும் பட்சத்தில் 1,000 யூரோ உதவியும் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இந்த உதவித் தொகை நாட்டில் அடுத்த ஆண்டு ஜனவரி 1-ஆம் திகதி முதல் வழங்கப்படும் என்றும், இதற்காக அரசு தரப்பில் 2 பில்லியன் யூரோக்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்