பிரான்சில் இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாடுளை அறிவித்தார் ஜனாதிபதி மேக்ரான்! மீறினால் எவ்வளவு அபராதம் தெரியுமா?

Report Print Santhan in பிரான்ஸ்

பிரன்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக, நாட்டின் தலைநகர் பாரிஸ் பிராந்தியம் மற்றும் முக்கிய நகரங்களுக்கான நான்கு வார இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாடு விதிகளை அறிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களாகவே பிரான்சில் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. கடந்த புதன் கிழமை கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 22,591 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆறு நாட்களில் மூன்றாவது முறையாக கொரோனாவா புதிதாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை, 20,000-ஐ தாண்டியுள்ளது. இதன் காரணமாக நாட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 32,000-ஐ தாண்டியுள்ளது.

இதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் நாட்டில் பல்வேறு கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படுகிறது.

இந்நிலையில் நாட்டி ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான், தலைநகர் பாரிஸ் மற்றும் பிற எட்டு நகரங்களுக்கு இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாடு விதிகளை அறிவித்துள்ளார்.

பாரிஸ் மற்றும் அதன் பிராந்தியத்திற்கு மேலதிகமாக, கிரெனோபில், லில்லி, லியோன், மார்சேய், மான்ட்பெல்லியர், ரூவன், செயிண்ட்-எட்டியென் மற்றும் துலூஸ் ஆகியவை புதிய நடவடிக்கைகுட்பட்டுள்ளன.

இந்த குறிப்பிடப்பட்டுள்ள நகரங்களில் இரவு ஊரடங்கு விதிகள் நடைமுறையில் இருக்கும், அதாவது இரவு 9 மணி முதல் காலை 6 வரை ஊரடங்கு கடைபிடிக்கப்படும், இந்த புதிய விதிகளை மீறும் எவருக்கும் 135 யூரோ அபராதமாக விதிக்கப்படும்.

இந்த புதிய கட்டுப்பாடுகள் வரும் சனிக்கிழமை முதல் நான்கு வாரங்களுக்கு நடைமுறைக்கு வரும், இந்த நேரங்களில் மக்கள் தேவையின்றி வெளியில் செல்வதோ, உணவகங்கள் போன்ற இடங்களுக்கு செல்வதோ கூடாது.

அதே சமயம் அத்தியாவசியப் பயணங்கள் அனுமதிக்கப்படும், பொதுப் போக்குவரத்து எந்த தடையும் இருக்காது என்று மேக்ரான கூறியுள்ளார்.

மேலும், மேக்ரான், நாங்கள் ஒரு கவலையான சூழ்நிலையில் இருக்கிறோம். ஆனால் அதே நேரத்தில் வைரஸின் கட்டுப்பாட்டை இழக்கவில்லை, எனவே வைரஸின் பரவலை தடுக்க வேண்டும், நாட்டின் சுகாதார அவசரகால நிலையை மீண்டும் நிலைநாட்டவும் இப்படி ஒரு நடவடிக்கை தேவைப்படுவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்