பிரான்ஸ் தலைநகரில் இரவு நேர ஊரடங்கு! புகழ் பெற்ற ஈபிள் கோபுரம் திறக்கப்பட்டிருக்கும் நேரத்தில் மாற்றம் என அறிவிப்பு

Report Print Santhan in பிரான்ஸ்

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் இரவு நேரத்தில் ஊரடங்கு சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளதையடுத்து, ஈபிள் கோபுரம் திறக்கப்பட்டிருக்கும் நேரத்தில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸின் பரவலை கட்டுப்படுத்துவதற்காக, பிரான்சில் தலைநகர் பாரிஸ் உட்பட சில நகரங்களில் இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

அதன் படி இரவு 9 மணியில் இருந்து காலை 6 மணி வரை அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வர வேண்டும், மற்றவற்றிற்கு அனுமதியில்லை.

இதன் காரணமாக ஊரடங்கு நிறைவடையும் வரை, புகழ் பெற்ற ஈபிள் கோபுரம் உள்ளூர் நேரப்படி காலை 10.30 மணிக்கு திறக்கப்பட்டு, மாலை 5.30 மணி வரை மட்டுமே திறந்திருக்கப்படும் என்று நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதற்கு முன்னர், உள்ளிருப்பு சட்டத்தின் பின்னர் ஜூன் 25 ஆம் திகதி ஈபிள் கோபுரம் திறக்கப்பட்டது. அதன்போது பலத்த வருவாய் இழப்பை ஈபிள் கோபுரம் சந்தித்திருந்தது. தற்போது கொரோனா வைரஸ் மீண்டும் ஈபிள் கோபுரத்தின் வருவாயை அசைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்