பாரிஸ் நகரை பதறவைத்த சம்பவம்... கழுத்து துண்டாக்கப்பட்டு படுகொலை: வெளிவரும் பகீர் பின்னணி

Report Print Arbin Arbin in பிரான்ஸ்

பாரிஸ் நகரில் துப்பாக்கி ஏந்திய தீவிரவாதி ஒருவரால் பாடசாலை ஆசிரியர் கழுத்து துண்டாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த தீவிரவாதி, பொலிசாரின் துரித நடவடிக்கையால் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாதிக்கப்பட்ட நபர் தமது பாடசாலை மாணாக்கர்களுக்கு நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திரத்தை காண்பித்து, பெற்றோர்களின் கோபத்திற்கு ஆளானவர் என கூறப்படுகிறது.

பொலிசாரால் கொல்லப்பட்ட அந்த தீவிரவாதி, 18 வயதேயான மாஸ்கோவில் பிறந்த செச்சென் இளைஞர் என தகவல் வெளியாகியுள்ளது.

சம்பவத்தின் போது அல்லாஹு அக்பர் என கத்தியபடி, அந்த ஆசிரியரை தாக்கியதாக கூறப்படுகிறது.

பாடசாலை மாணவர்களுக்கு நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திரத்தை காண்பித்ததால், இவர் ஆத்திரம் கொண்டதாக தெரியவந்துள்ளது.

பாதிக்கப்பட்டவர் சமீபத்தில் தனது மாணவர்களுக்கு கருத்துச் சுதந்திரம் குறித்து பாடம் எடுத்ததோடு, நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திரங்களையும் காட்டியிருந்தார்.

பாரிஸின் புறநகரில் ஒரு நபர் கழுத்து துண்டாக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தை விசாரிப்பதாக பிரெஞ்சு பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தரணிகள் உறுதிப்படுத்தினர்.

வெள்ளிக்கிழமை உள்ளூர் நேரப்படி 5.30 மணியளவில் கழுத்து துண்டிக்கப்பட்ட நிலையில் சடலம் ஒன்றை கண்டெடுத்துள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவப்பகுதிக்கு விரைந்து வந்த பொலிசார், குறித்த சம்பவத்திற்கு தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் நபரால் துப்பாக்கியை காட்டி மிரட்டல் விடுத்ததாக தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்