பிரான்ஸில் தலை துண்டாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட ஆசிரியர் இவர் தான்! வெளியான புகைப்படம் மற்றும் முழு விபரம்

Report Print Basu in பிரான்ஸ்
2595Shares

பிரான்ஸில் தலை துண்டாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட ஆசிரியரின் பெயரும் அவரின் புகைப்படமும் வெளியாகியுள்ளது.

முஹம்மது நபி அவர்களின் சர்ச்சைக்குரிய கார்ட்டூன்களை தனது மாணவர்களுக்குக் காட்டியதாற்காக இஸ்லாமிய தீவிரவாதி என்று சந்தேகிக்கப்படும் நபரால் கொல்லப்பட்ட ஆசிரியர் 47 வயதான சாமுவேல் பாட்டி என தெரியவந்துள்ளது.

ஆசிரியரை கொடூரமாக கொன்றவன் Chechen பகுதியைச் சேர்ந்த Aboulakh A என பொலிசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தை தொடர்ந்து Aboulakh A-வை கைது செய்ய முயன்ற போது பொலிசார் அவனை சுட்டுக் கொன்றனர்.

கொல்லப்படுவதற்கு முன்னர் ஆசிரியர் சாமுவேல் பாட்டிக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

சாமுவேல் வகுப்பறையில் முஹம்மது நபியின் கார்ட்டூன்களை காட்டியதற்காக முஸ்லிம் மாணவர்களின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மேலும், வடக்கு பாரிஸில் உள்ள காவல் நிலையத்தில் சாமுவேல் மீது புகார் கொடுத்துள்ளனர். மேலும், ஆன்லைன் வீடியோவில் ஆசிரியர் ஒரு 'குண்டர்' என முத்திரை குத்தியுள்ளனர்.

குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது, சம்பவத்திற்கு முந்தைய நாள் பாரிஸ் மசூதியை சேர்ந்த நபர்கள் மத்தியில் குறித்த வீடியோ பகிரப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆசிரியர் சாமுவேல் கொலை தொடர்பாக முஹம்மது நபியின் கார்ட்டூன்களை காட்டியதற்காக எதிர்ப்பு தெரிவித்த இரண்டு பெற்றோர்கள் உட்பட 9 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்