பிரான்சில் ஊரடங்கிற்கு சில விதி விலக்குகளும் உள்ளது! உங்களுக்குத் தெரியுமா?

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிரான்சில், எட்டு பகுதிகளில் இரவு 9 மணிக்குமேல் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கிற்கு சில விதிவிலக்குகள் உள்ளன.

தொழில் தொடர்பாக மற்றும் மருத்துவத் தேவைகள் முதலான காரணங்களுக்காக பயணிப்பதற்கு விதிவிலக்கு அளிக்கப்படுகிறது.

அப்படி விதிவிலக்கு பெற்று பயணிப்பதற்காக ஒரு படிவம் உள்ளது. அதில் பெயர், முகவரி மற்றும் ஊரடங்கை மீறவேண்டியதன் காரணம் முதலானவற்றை நிரப்பவேண்டும்.

யாரெல்லாம் விதி விலக்கு கோரலாம்

பணி, பல்கலைக்கழகம் அல்லது பயிற்சிபெறும் இடத்திற்கு சென்று வருவோருக்கு. நீண்டகால உடல் நல பிரச்சினைக்காக மருத்துவரைக் காணச் செல்லுதல் மற்றும் மருந்து வாங்கச் செல்வோருக்கு.

அவசர குடும்ப விடயம், குழந்தைகளை கவனித்துக்கொள்ள முதலான விடயங்களுக்காக பயணிப்பவர்கள்.

உடற்குறைபாடு கொண்டவர்கள் மற்றும், அவர்களுடன் செல்வோருக்கு. நீதித்துறை முதலான சம்மன் அளிக்கப்பட்டோர்.

பொதுமக்கள் தொடர்பான பணி ஒன்றிற்காக நிர்வாக அதிகாரிகள் அழைப்பின்பேரில் செல்வோர்.

நீண்ட பயணம் செய்வோர் பிரான்ஸ் வழியாக கடந்து செல்லும்போது. செல்லப்பிராணிகளை தன் வீட்டிலிருந்து 1 கிலோமீற்றர் தொலைவுக்குள் அழைத்துச் செல்வோர், ஆகியோருக்கு ஊரடங்கிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்படும்.

ஆனால், சரியான காரணங்கள் இன்றி ஊரடங்கை மீறி பிடிபடுவோருக்கு 135 யூரோக்கள் அபராதம் விதிக்கப்படும்.

By Connexion journalist

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்