பிரான்ஸிலிருந்து இங்கிலாந்துக்கு செல்ல முயன்ற அகதி ஒருவருக்கு நேர்ந்த துயரம்! சோக பின்னணி

Report Print Karthi in பிரான்ஸ்

ஆங்கிலக் கால்வாய் வழியாக பிரான்ஸிலிருந்து இங்கிலாந்திற்கு செல்ல முயன்ற அகதி ஒருவர் இறந்து கரை ஒதுங்கியுள்ள சம்பவம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் உலகமயமாக்கல் காரணமாக பல்வேறு இனக்குழுக்கள் தங்களது சொந்த மண்ணை விட்டு தொடர்ந்து இடம்பெயர்ந்து வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக, பிரான்ஸின் கலேஸ் பகுதியிலிருந்து இங்கிலாந்திற்கு செல்ல முயன்ற ஒருவர் சடலமாக சங்கதே கடற்கரையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

அவர் யார் என்பது குறித்த சரியான தகவல்கள் எதுவும் கிடைக்காத நிலையில், புலம் பெயர்பவர்களில் ஒருவராக இருக்கலாம் என்று பிரான்ஸ் அதிகாரிகள் கணித்துள்ளனர்.

உயிரிழந்த நபர் இங்கிலாந்திற்கு சட்ட விரோதமாக கடல் வழியாக பயணிக்கும்போது தவறி விழுந்தது உயிரிழந்திருக்கலாம் என பிரான்ஸின் போலோக்னே-சுர்-மெர்வை சேர்ந்த வழக்கறிஞர் பாஸ்கல் மார்கன்வில்லே தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஞாயிறு அன்று பல சிறிய படகுகளை பிரான்ஸ் அதிகாரிகள் திருப்பியனுப்பியதாக உள்ளூர் செய்தி ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்ட படகில் ஒரு தாயும், குறைந்த வெப்பநிலையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளும் இருந்ததாக தெரிய வந்துள்ளது.

உள்துறை அலுவலகத்தின் புள்ளிவிவரத்தின்படி, சனிக்கிழமை மட்டும், 12 படகுகளில் 170க்கும் அதிகமானோர் பிரான்ஸிலிருந்து இங்கிலாந்திற்கு சென்றுள்ளனர். 222 பேர் பிரான்ஸ் அதிகாரிகளால் தடுக்கப்பட்டுள்ளனர்.

"கலீஸில் கடுமையான மற்றும் சுகாதாரமற்ற நிலைமைகள் இருப்பதாலும், தொடர்ந்து அதிகாரிகளால் துன்புறுத்தப்பட்டு, துஷ்பிரயோகம் செய்யப்படுவதாலும், அங்கிருந்து அவர்கள் இங்கிலாந்திற்கு புலம் பெயர முடிவெடுக்கின்றனர்.” என கலேஸ் தொண்டு நிறுவனத்தின் இணை நிறுவனர் கிளேர் மோஸ்லி கூறுகிறார்.

"இந்த வழியை சாத்தியமற்றதாக மாற்ற சட்டவிரோதமாக வசதி செய்யப்பட்ட இந்த பயணங்களின் ஒவ்வொரு கட்டத்திலும் நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.” என குடிவரவு இணக்க மற்றும் நீதிமன்றங்களுக்கான அமைச்சர் கிறிஸ் பில்ப் சமீபத்தில் கூறியுள்ளார்.

புலம் பெயர்தல் என்பது ஒரு சர்வதேசிய பிரச்னையாகும். இதற்கான தீர்வுகளை உலக நாடுகள் ஒன்றிணைந்து மேற்கொள்ளுதலே இவ்வாறான உயிரிழப்புகளுக்கான நிரந்தர தீர்வாக இருக்க முடியும்.


மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்