பிரான்சில் மேலும் பல நகரங்கள் அதி உச்ச எச்சரிக்கை பகுதிகள்! நாளை பிரதமர் முக்கிய உரை

Report Print Santhan in பிரான்ஸ்
360Shares

பிரான்சில் மேலும் பல நகரங்கள் அதிஉச்ச எச்சரிக்கை பகுதிகள் குறித்து நாளை பிரதமர் அறிவிப்பார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனாவின் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்வதால், பிரான்சில் தலைநகர் பாரிஸ் முதல் பல நகரங்களில் மாலை 9 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால் பிரான்சில் மிக உச்சமாகக் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, பெரும் ஆபத்தினையும், அதிகரித்துச் செல்லும் உயிரிழப்புகளையும் அதிகரித்துள்ளது.

இதனால் மேலும் பல நகரங்கள் அதிஉச்ச எச்சரிக்கைப் பகுதியாக நாளை வியாழக்கிழமை முதல் அறிவிக்கப்பட உள்ளது. இந்த நகரங்களும் நாளை முதல் ஊரடங்கிற்குள் அடக்கப்படும்.

இன்று நடந்த அமைச்சர்களின் ஆலோசனைக் கூட்டம் முடிந்த நிலையில், அரசாங்கத்தின ஊடக பேச்சாளரான், Gabriel Attal நாளை வியாழக்கிழமை மாலை உள்ளூர் நேரப்படி 5 மணிக்குத் தொலைக்காட்சியில் பிரான்சின் பிரதமர் ஜோன் கஸ்தெக்ஸ் அறிவிக்க உள்ளார்.

பிரான்சின் அதிஉச்ச கொரோனாத் தொற்று நாட்டினை மீண்டும் உள்ளிருப்பிற்குள் கொண்டு வருமா என்ற கேள்வி பல மட்டங்களில் எழுந்துள்ளன.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்