முகமது நபியின் சர்ச்சைக்குரிய கார்ட்டூன்களை வகுப்பறையில் காட்டியதற்காக ஆசிரியர் ஒருவர் கொல்லப்பட்ட விடயம் பிரான்சையே பரபரப்படைய செய்துள்ள நிலையிலும், அடுத்து ஒரு சர்ச்சைக்குரிய செயலை செய்ய இருக்கிறது பிரான்ஸ்.
ஐந்து வருடங்களுக்கு முன் சார்லி ஹெப்டோ என்னும் பிரெஞ்சு பத்திரிகை, முகமது நபியை அவமதிக்கும் வகையில் கார்ட்டூன்கள் சிலவற்றை வெளியிட்டது. அதனால் கோபமடைந்த இஸ்லாமிய தீவிரவாதிகள் பத்திரிகை அலுவலகத்தை சூறையாடினார்கள். 12 பேர் கொல்லப்பட்டார்கள்.
அந்த சம்பவம் தொடர்பாக 14 பேர் மீது செப்டம்பர் 2ஆம் திகதி விசாரணை துவங்கியது. விசாரணை துவங்கியதை கொண்டாடுவதற்காக மீண்டும் சார்லி ஹெப்டோ, அதே சர்ச்சைக்குரிய கார்ட்டூன்களை தனது பத்திரிகையில் வெளியிட்டது.
அதைத் தொடர்ந்து, அதே அலுவலகம் முன்பு ஒருவர் கத்தியுடன் வெறியாட்டத்தில் ஈடுபட்டார், நான்குபேர் படுகாயமடைந்தார்கள்.
இப்படி அந்த கார்ட்டூன்களால் தொடர்ந்து பிரச்சினை ஏற்பட்டு வரும் நிலையில், பாரீஸில் வகுப்பில் பாடம் எடுக்கும்போது, அதே சர்ச்சைக்குரிய கார்ட்டூன்கள் குறித்து, பாரீசீல் வாழும் Samuel Paty (47) என்ற வரலாற்று ஆசிரியர் விமர்சித்ததாக கூறப்படுகிறது.
அதைத் தொடர்ந்து, Samuelஐ Aboulakh Anzorov என்ற நபர் கத்தியால் கொடூரமாக தாக்கிக் கொன்று, அவரது தலையையும் வெட்டினார்.
இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பாரீஸில் வாக்கிங் சென்ற இஸ்லாமிய பெண்கள் இருவர் கத்தியால் குத்தப்பட்டார்கள்.
பிரான்சைப் பொருத்தவரை, மற்ற மதங்களை விமர்சிப்பது சட்டப்படி அவர்களது உரிமை என பிரெஞ்சு மக்கள் கருதுகிறார்கள்.
ஆகவே, தங்கள் உரிமையை தாங்கள் செயல்படுத்துவதை இஸ்லாமிய தீவிரவாதிகள் எதிர்ப்பதாக அவர்கள் கருதுகிறார்கள்.
இந்த எண்ணம், Samuelஇன் இறுதிச்சடங்கில் பிரான்ஸ் ஜனாதிபதி ஆற்றிய உரையிலும் வெளிப்பட்டது.
சூழ்நிலை இப்படி பரபரப்பாக இருக்கும் நிலையில், கொல்லப்பட்ட Samuelக்கு அஞ்சலி செலுத்துவதற்காக Occitanie பகுதியிலுள்ள இரண்டு ஹொட்டல்களின் முன்புறச் சுவர்களில் அதே சர்ச்சைக்குரிய கார்ட்டூன்களில் ஆறு பிரமாண்டமாக ஒளிப்படமாக திரையிடப்பட இருக்கின்றன.
இந்த செயல், உயிரிழந்த Samuelஇன் குடும்பத்தாரையும் பிரான்ஸ் மக்களுக்கும் அமைதியைக் கொண்டு வருமா ஆல்லது மேலும் பிரச்சினையை ஏற்படுத்துமா என்பது தெரியவில்லை.