பிரான்சில் தீவிரவாதிக்கு ஆசிரியரை அடையாளம் காட்டிய இரு இளம் மாணவர்கள்: பணம் வாங்கியதும் அம்பலம்

Report Print Arbin Arbin in பிரான்ஸ்
1628Shares

பிரான்சில் தீவிரவாதி இளைஞரால் பாடசாலை ஆசிரியர் ஒருவர் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய இரு சிறார்கள் மீது பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை பாய்ந்துள்ளது.

குறித்த சிறார்கள் இருவரும், ஆசிரியரை தீவிரவாதிக்கு அடையாளம் காட்டுபதற்காக 300 யூரோ கூலியாக பெற்றதும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

அக்டோபர் 17 ஆம் திகதி பாடசாலை ஆசிரியரான சாமுவேல் பாட்டியை 18 வயதேயான அப்துல்லா அன்சோரோவ் என்ற இளைஞர் கழுத்து துண்டித்து படுகொலை செய்தார்.

இந்த விவகாரத்தில் தீவிரவாதி அன்சோரோவுக்கு பாடசாலை இளம் மாணாக்கர்கள் இருவர் உதவியதாகவும், அவர்கள் 300 யூரோ அதற்கு கூலியாக பெற்றதும் தற்போது அம்பலமாகியுள்ளது.

அந்த ஆசிரியரை சந்தித்து, நடந்தவற்றிற்கு அவரை மன்னிப்பு கேட்க வைக்க வேண்டும் என்றே அன்சோரோவ் குறித்த இளம் மாணாக்கர்களிடம் கூறி நம்பவைத்துள்ளான்.

மட்டுமின்றி, சுமார் 2 மணி நேரம் அன்சோரோவ் அந்த இளம் மாணாக்கர்களிடம், ஆசிரியர் பாட்டி தொடர்பில் விரிவாக விவாதித்துள்ளான்.

தற்போது, ஆசிரியர் பாட்டி கொலை வழக்கில் தொடர்புடையதாக கைது செய்யப்பட்டுள்ள 7 பேரில், 14 மற்றும் 15 வயதுடைய இந்த இரு சிறார்களும் சட்ட சிக்கலை எதிர்கொள்ள இருக்கின்றனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்