சொந்த மகள் உட்பட 160 பெண்கள்... சிக்கிய முக்கிய நபர்: பிரான்ஸ் பொலிசார் அதிரடி நடவடிக்கை

Report Print Arbin Arbin in பிரான்ஸ்
922Shares

இளம் பெண்கள் மீதான தாக்குதல் உட்பட 160 பாலியல் வன்கொடுமை வழக்கில் தேடப்படும் குற்றவாளியான இத்தாலிய நபரை ஜேர்மன் எல்லையில் பிரான்ஸ் பொலிசார் கைது செய்துள்ளனர்.

ஜேர்மனி எல்லை அருகாமையில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பிரான்ஸ் பொலிசார் குறித்த 52 வயதான நபரை கைது செய்துள்ளனர்.

கடந்த 2000 முதல் 2014 வரையான காலகட்டத்தில் பெண்கள் மற்றும் சிறார் மீதான வன்கொடுமை புகார் தொடர்பில் பொலிசார் அந்த நபரை தேடி வந்துள்ளனர்.

ஜேர்மனி அதிகாரிகளும் அந்த நபர் தொடர்பில் 122 வழக்குகளை பதிவு செய்து விசாரணை முன்னெடுத்து வருகின்றனர்.

பல்வேறு வழக்குகள் அந்த நபர் மீது பதியப்படிருந்தும், பல ஆண்டுகளாக சொந்த மகளையே அந்த நபர் துஸ்பிரயோகம் செய்துள்ளதை பிரான்ஸ் பொலிசார் உறுதி செய்துள்ளனர்.

ஜேர்மன் பொலிசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அக்டோபர் 7 ஆம் திகதி பிரான்ஸ் பொலிசாருக்கு எச்சரிக்கை செய்துள்ளனர்.

மேலும், அவர் கிழக்கு பிரான்சில் அல்சேஸில் குடியேற திட்டமிட்டு எல்லையைத் தாண்டியுள்ளார் என்ற தகவலையும் அளித்துள்ளனர்.

இதனையடுத்து அதிரடி நடவடிக்கையில் களமிறங்கிய பிரான்ஸ் பொலிசார் அக்டோபர் 16 ஆம் திகதி அந்த நபரை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்