பிரான்ஸ் மக்கள் 20 சதவீதம் பேராவது இதை பதிவிறக்கம் வேண்டும்! கொரோனா சூழ்நிலையில் அரசு முக்கிய அறிவிப்பு

Report Print Basu in பிரான்ஸ்

பிரான்சின் புதிய கொரோனா தொடர்பு-தடமறிதல் செயலியை குறைந்தது 20% மக்கள் பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்று டிஜிட்டல் விவகார அமைச்சர் தெரிவித்தார்.

ஆனால் அது தற்போது அந்த நிலையை அடைவதற்கு வெகு தொலைவில் உள்ளது

அக்டோபர் 22-ஆம் திகதி பிரான்ஸ் தனது கொரோனா தொடர்பு-தடமறிதல் செயலியை மீண்டும் அறிமுகப்படுத்தியது, அதன் பின்னர் ஷம் கூடுதலாக 1.2 மில்லியன் பேர் செயலியை பதிவிறக்கிய நிலையில் மொத்தமாக பதிவிறக்கயவர்களின் எண்ணிக்கை 4 மில்லியனாக அதிகரித்துள்ளது.

செயலி பலனாக இருக்க, மக்கள்தொகையில் சுமார் 20% அல்லது 15 முதல் 20 மில்லியன் மக்கள் இதைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்று டிஜிட்டல் விவகார அமைச்சர் செட்ரிக் ஓ பிரான்சிஃபோ கூறினார்.

இதேபோன்ற செயலிகள் பிரித்தானியா, ஜேர்மனி மற்றும் கனடாவில் சிறப்பாக செயல்படுவதாக அவர் கூறினார், ஆனால் இந்த செயலி பிரான்சில் வெற்றிகரமாக தொடர்பு கொண்டதற்கான உதாரணங்களை அவர் வழங்கவில்லை.

தொற்றுநோயைத் தடுப்பதைத் தவிர வேறு எந்த நோக்கத்திற்காகவும் தரவு பயன்படுத்தப்படாது என்று அரசாங்கத்தின் உத்தரவாதம் அளித்த போதிலும், பிரான்சில் பலர் தனியுரிமை தகவல்கள் குறித்த கவலைகளால் செயலியை பதிவிறக்க தயங்குகிறார்கள்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்