பிரான்சில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 50,000 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த தகவலை பிரான்சின் சுகாதாரத்துறையானது ஞாயிறன்று மாலை உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் அதிக அளவில் கொரோனா பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், மீண்டும் ஒருமுறை அதிக எண்ணிக்கையிலான பாதிப்பு பதிவாகியுள்ளது.
67 மில்லியன் மக்கள் தொகை கொண்ட நாட்டில், கடந்த ஒரு வார காலமாக கொரோனா பாதிப்பு நிலவரம் கடுமையாக மாறியுள்ளது.
மட்டுமின்றி கடந்த ஒரு வாரத்தில் மட்டும், பலமுறை அதிக எண்ணிக்கையிலான பாதிப்புகள் பதிவாகியுள்ளது.
பிரான்ஸ் முழுவதும் கொரோனா வியாபித்ததன் பின்னர் இதுவரை 34,700 பேர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளனர்.
இதனிடையே, சனிக்கிழமை முதல், நாட்டின் மூன்றில் இரண்டு பங்கு மக்களுக்கு இரவு நேர ஊரடங்கு உத்தரவு அமுலில் கொண்டுவரப்பட்டுள்ளது.
இதனால் சுமார் 46 மில்லியன் மக்கள் பாதிப்புக்கு உள்ளாவார்கள் என கருதப்படுகிறது.
இரவு ஊரடங்கு வேளையில், மக்கள் சரியான காரணத்துடன் மட்டுமே வெளியே செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.