பிரான்சில் ஜோர்டான் நாட்டைச் சேர்ந்த இரண்டு பேர் இனவெறி தாக்குதலுக்குள்ளான சம்பவம் குறித்து அந்நாட்டு அரசர் கேட்டறிந்துள்ளார்.
பிரான்ஸ் தலைநகர் பாரிசிற்கு வெளியே இருக்கும் சிறிய நகரமான Angers பகுதியிலே இருந்த இந்த சம்பவம் நடந்துள்ளது.
தாக்குதல் நடத்தியவர்கள் இவர்கள் அரபு மொழி பேசுவதைக் கேட்ட பின்னர், அப்படி நடந்து கொண்டதாக உள்ளூர் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து அறிந்த ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லா அவர்களுடன் தொலைப்பேசியில் பேசியுள்ளார்.
அவர்களின் உடல்நிலை குறித்து விசாரித்த அவர், பாரிஸில் உள்ள ஜோர்டானிய தூதரகம் தேவையான உதவிகளை வழங்குவதை உறுதி செய்யும் என்று தெரிவித்தார்.
இதையடுத்து அந்த ஜோடி, அரசருக்கு உருக்கமாக நன்றி தெரிவித்துள்ளனர்.
உள்ளூர் ஊடகங்களுடனான ஒரு தொலைபேசி நேர்காணலின் போது இன்வெறி தாக்குலுக்குள்ளான முகமது அபு ஈத் என்பவர் கூறுகையில், தாக்குதல் நடத்தியவர்கள் என்னையும் என் மனைவியையும் கத்த ஆரம்பித்தார்கள்,
கோபமாக இது பிரான்ஸ், உங்கள் நாடு அல்ல என்று கூறினார். நாங்கள் பேருந்து நிலையம் ஒன்றில் அரபு மொழியில் பேசுவதைக் கேட்டு, அவர்கள் இப்படி நடந்து கொண்டனர்.

இருப்பினும் இதுவரை இது போன்ற செயலில் ஈடுபட்டவர்கள் பொலிசாரிடம் பிடிபடவில்லை, அபு ஈத் பிரான்சில் இருக்கும் அரசு பள்ளியில் அரபு கற்பித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த ஜோடி பிரான்ஸ் அதிகாரிகளின் உதவியையும், ஜோர்டானிய வெளியுறவு அமைச்சகத்தையும் பாராட்டியது, ஏனெனில் அவர்களுக்கு தேவையான உதவிகளும் செய்யப்பட்டது.
இது புகார் குறித்து உள்ளூர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதால், இது குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.